Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அயோத்யா » ஈர்க்கும் இடங்கள் » ட்ரேடா-கே-தகூர்

ட்ரேடா-கே-தகூர், அயோத்யா

20

ராவணனை வீழ்த்திய வெற்றியை கொண்டாட ராம பிரான் அஸ்வமேத யாகத்தை அயோத்யாவில் மேற்கொண்டார் என்று சமயஞ்சார்ந்த நூல்கள் கூறுகின்றன.

இந்த யாகம் நடந்த இடத்தில் தான் ட்ரேடா-கே-தகூர் கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சத்யுக்கிற்கு பின் ட்ரேடா யுக்கின் கடவுளாக இருந்ததால் ஸ்ரீ ராமரை தான் ட்ரேடா-கே-தகூர் என்று அழைக்கிறோம்.

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குலு என்ற இடத்தை ஆண்ட அரசரால் 300 வருடங்களுக்கு முன் அயோத்யாவில் உள்ள நயா காட் என்ற இடத்தில் இதே பெயரில் ஒரு கோவில் கட்டப்பட்டது. இது பின்னர் மராத்திய மகாராணியான அஹில்ய பை ஹோல்கரால் புதுப்பிக்கப்பட்டது.

இந்த கோவிலில் ஸ்ரீ ராமர், அவருடைய மனைவியான சீதா பிராட்டி, அவருடைய சகோதரர்களான லக்ஷ்மணன், பரதன், சத்ருகன், அவருடைய காவலர்களான ஜெய்-விஜய், வசிஷ்ட முனிவர், சுக்ரீவ அரசர் மற்றும் ராமரின் நம்பிக்கையான பக்தன் அனுமான் ஆகியோர்களின் விக்கிரங்கள் உள்ளன.

ஸ்ரீ ராமர், சீதா தேவி மற்றும் அவரின் மூன்று சகோதரர்களின் சிலைகள் சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள மூலக் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று நம்பப்படுகிறது. அனைத்து விக்கிரங்களும் ஒரே கருங்கல்லிலிருந்து செதுக்கப்பட்டவை.

இந்த கோவில் ஏகாதேசி அல்லது கார்த்திகை மாதத்தின் 11 வது நாள் திறக்கப்படும். அன்றைய நாளில் ஸ்ரீ ராமரின் அருளைப் பெற பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed