பந்திப்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விமான நிலையமாக பெங்களூர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளி நாட்டுப்பயணிகளுக்கு ஏற்ற வகையில் சேவைகளை அளிக்கிறது. பந்திப்பூரிலிருந்து 215 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் விமான நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களையும் மற்றும் ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க, மத்தியகிழக்காசிய நகரங்களையும் விமான சேவைகளால் இணைக்கிறது.