Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பந்திபூர் » வானிலை

பந்திபூர் வானிலை

அக்டோபர் முதல் மே வரை இடைப்பட்ட காலம் வனவிலங்குகளைப் பார்ப்பதற்கும் பந்திப்பூர் தேசிய வனவிலங்கு பூங்காவின் உள்ளே சுற்றிப்பார்ப்பதற்கும் ஏற்ற காலமாகும். ஜுன் மற்றும் செப்டம்பர் வரையிலான காலமும் சுற்றுலாவுக்கு உகந்தது என்றாலும் கடும் மழை பற்றிய எச்சரிக்கையும் தேவை.

கோடைகாலம்

(மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை): கோடைக்காலத்தில் பந்திப்பூர் வனப்பகுதி வெப்பநிலை மிக கடுமையான உஷ்ணத்துடன் காணப்படுகிறது. பகலில் 320 C வரையிலும்  மற்றும் இரவில் 250 C ஆகவும் இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டெம்பர் வரை): பந்திப்பூர் வனப்பகுதி மழைக்காலத்தில் நல்ல கடுமையான மழையை பெறுகிறது. வனவிலங்குகளை அதிகம் பார்க்க முடியாது என்பதால் பயணிகள் குறைந்த அளவிலேயே இக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்கின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தில் பந்திப்பூர் வனப்பகுதி இனிமையாகவும் குளுமையாகவும் காணப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை100 C ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 250 C ஆகவும் உள்ளது. குளிர்காலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியின் பருவநிலை ஒரு அற்புதமான குளுமையுடன் விளங்குவதால் பயணிகள் இக்காலத்தில் அதிகம் வருகை தருகின்றனர்.