Search
  • Follow NativePlanet
Share

பர்தமான் - சரித்திர நகரம்!

15

கொல்கட்டாவிற்கு அருகில் இருக்கும் பர்தமான் நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும், கிபி 6ஆம் நூற்றாண்டு வரை செல்லும் அதன் வரலாறு மகாவீர் காலத்தை ஒத்ததாய் இருக்கிறது. மேலும் ஆங்கிலேயர்களின் தலைமைச் செயலகமாகவும் இவ்வூர் விளங்கியது.

நகரத்தில் உள்ள கோவில்கள்

பர்தமான் சுற்றுலாத்துறை அங்குள்ள கோவில்களையே பெரிதும் சார்ந்திருக்கிறது. வங்காள இந்து கலாச்சாரத்தின்படி இயங்கும் இக்கோவில்களில் சர்வமங்களா கோவில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பர்தமானில் கிடைக்கும் உணவுகள்

கர்ஜான் வாயில் மற்றும் மஹாராஜா கோலாபாக் தோட்டம் ஆகியவை பர்தமானில் முக்கியமான சுற்றுலா தளங்கள் ஆகும். இவற்றுக்கு அருகாமையில் உள்ள உணவங்களில் முகாலய சாயலுடன் கூடிய சுவை மிகுந்த பெங்காளி உணவுகள் கிடைக்கின்றன.

சிடாபோக் மற்றும் மிஹிதானா ஆகிய இனிப்பு வகைகள் இவ்வூரின் சிறப்பம்சங்களாகும். மற்றொருபுறம் சுவை மிகுந்த மீன் உணவுகள் விற்கப்படுகின்றன.

திருவிழாக்கள்

திருவிழாக்களை பர்தமான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இந்துப் பண்டிகைகளான ஹோலி, தீபாவளி மற்றும் புதுவருடப் பிறப்பு போன்ற சமயங்களில் ஊரே விழாக்கோலம் பூணுகிறது.

துர்கா பூஜா, தசரா ஆகிய விழாக்கள் வங்காள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இச்சமயங்களில் ஏராளமான உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.

கல்வி மையம்

1960களில் கிழக்கு இந்தியாவில் புகழ்பெற கல்வி மையமாக பர்தமான் வளரத் துவங்கியது. தரமான கல்விக்காக ஏராளமான மாணவர்கள் இங்கு வரத் துவங்கினார்கள். புகழ்பெற்ற விஞ்ஞான மையங்களும், புர்த்வான் பல்கலைக்கழகம் இங்கே அமைந்துள்ளது.

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

ஓய்வு நேரம் இருப்பின் 108 தனித்துவம் வாய்ந்த சிவலிங்கங்கள் இருக்கும் நவாப் ஹட் சென்றுவாருங்கள். நவாப் ஹட் என்றால் 108கோவில்கள் என்று பொருள். மஹாசிவராத்திரி விழா இங்கு மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

ஆஃப்கான் ஷேர் கல்லறை ஆகட்டும், ரமணா பங்கன் வன அலுவலகம் ஆகட்டும் அனைத்து வகையான சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறும் பர்தமானில் பார்க்க விசயங்கள் இருக்கிறது.

பர்தமான் அடைவது எப்படி?

புகழ்பெற்ற தம் என்பதால் பர்தமானை  சாலை, ரயில் மற்றும் விமானம் மூலமாக சுலபமாக அடையலாம்.

பர்தமான் சிறப்பு

பர்தமான் வானிலை

சிறந்த காலநிலை பர்தமான்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பர்தமான்

  • சாலை வழியாக
    மாநிலத் தலைநகருடன் தேசிய நெடுஞ்சாலை எண் 1 பர்தமானை இணைக்கிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பர்தமானை பிற நகரங்களுடன் இணைக்கும் கொல்கட்டா ரயில் நிலையம் இங்கிருந்து102கிமீ தொலைவில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்கட்டாவில் இருக்கும் நேதாஜி விமான நிலையத்தை அடைவதன் மூலம் பர்தமான் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat