பரோக் என்று இந்த நகரத்திற்கு பெயர் வரக்காரணமான ஆங்கிலேயப்பொறியாளர் திரு பரோக் அவர்களின் கல்லறை ஸ்தலம் இது. ரயில்பாதைக்காக இந்த இடத்தில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு இவர் பொறுப்பேற்றிருந்தார்.
சீக்கிரமாக பணியை முடிக்கும் நோக்கத்துடன் மலை இருபுறமிருந்தும் குடைவு வேலையை அவர் மேற்கொண்டார். இருப்பினும் அளவீடுகளில் ஏற்பட்ட பிழை காரணமாக, இருபுறமிருந்தும் குடையப்பட்ட பாதைகள் ஒன்றை ஒன்று சரியாக சந்திக்காமல் விலகி விட்டன.
இந்த கட்டுமான பிழைக்காக ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அவமானத்தை தாங்கமுடியாத பரோக் தற்கொலை செய்து கொண்டார். அவரது அந்த திட்டம் மட்டும் பூர்த்தியடைந்திருந்தால் அந்த சுரங்கப்பாதை உலகிலேயே மிக நீண்ட சுரங்கப்பாதையாக இருந்திருக்கும்.
இயற்கை எழில் சூழலில் அழகிய தோட்டப்பூங்கா வளாகத்தில் இவரது கல்லறை அமைந்துள்ளது. இப்படியும் அபூர்வ மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கான வரலாற்றுச்சான்றாக விளங்கும் இந்த கல்லறை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications