பஸ்தி மாவட்டத்தின் மிக முக்கியமான மார்க்கெட் பகுதி பக்கே பஜார் என்று அழைக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த மார்க்கெட் பகுதிக்கு உள்ளூர் நகர மக்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் விஜயம் செய்கின்றனர். நாள் முழுதும் மக்கள் கூட்டத்துடன் சந்தடி நிரம்பிய இடமாக இந்த பக்கே பஜார் காட்சியளிக்கிறது.
நகரின் மிக பழமையான மார்க்கெட் பகுதி என்பதால் இங்கு பாரம்பரியமான வியாபார நிறுவனங்கள் அதிகம் காணப்படுகின்றன. மருத்துவமனைகள், மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள், எழுதுபொருள் கடைகள், விளையாட்டுப்பொருள் அங்காடிகள், நகைக்கடைகள், துணிக்கடைகள், விருந்தினர் விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற யாவும் இங்கு நிரம்பியுள்ளன.
நெருக்கடியான இடம் என்பதால் காரில் செல்வதை தவிர்த்து ரிக்ஷா அல்லது சைக்கிளில் இந்த மார்க்கெட் பகுதிக்கு விஜயம் செய்வது நல்லது. இல்லையேல் வாகனத்தை நிறுத்த இடம் கிடைக்காமல் தடுமாற நேரிடும்.



Click it and Unblock the Notifications