காடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ராஷ்டிரிய வன் சேத்னா கேந்த்ரா எனும் பஸ்தி நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சந்த் ரவி தாஸ் வன் விகார் என்றும் அழைக்கப்படுகிறது.
பஸ்தி ஒரு புராதனமான நகரமாகும். இந்த இடம் ஒரு காலத்தில் முனிவர்கள் மற்றும் யோகிகள் ஆசிரமங்கள் அமைத்து வசித்த இடமாக இருந்திருக்கிறது. ராமரின் குருவான வசிஷ்ட முனிவர் இங்கு வசித்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே ராமர் தனது தம்பி லக்குவனனுடன் சிறிது காலம் குருகுல வாசம் செய்த இடமாக இது சொல்லப்படுகிறது.
பஸ்தி மாவட்ட மையத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலும் கணேஷ்பூர் கிராமத்திற்கு வெகு அருகிலும் உள்ள இந்த ராஷ்டிரிய வன் சேத்னா கேந்த்ரா வளாகத்தில் ஒரு குழந்தைகள் பூங்கா மற்றும் ஒரு அழகிய ஏரி ஆகியவையும் அமைந்துள்ளன. இந்த ஏரியில் படகுச்சவாரியும் செல்லலாம்.
பூங்காவின் அழகுக்கு இன்னும் பொலிவூட்டும் வகையில் இரண்டு இடங்களில் கன்வா ஆறு இந்த பூங்காவை தொட்டுக்கொண்டு ஓடுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இங்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications