Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரத்பூர் » வானிலை

பரத்பூர் வானிலை

பரத்பூரின் மழை மற்றும் பனிக் காலங்களில் ஏராளமான பறவைகள் உலகின் பல்வேறு பகுதிகளிருந்து புலம்பெயர்ந்து கியோலாடியோ தேசிய பூங்காவுக்கு வருவதால், அந்த சமயங்களில் நீங்கள் பரத்பூர் நகருக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : பரத்பூர் நகரின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 45 டிகிரியும், குறைந்தபட்சமாக 37 டிகிரியுமாக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : பரத்பூர் நகரின் மழைக் காலங்களில் 27 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும். அதோடு 70 சதவிகித அளவு ஈரப்பதமும் இந்த காலங்களில் பரத்பூர் நகரில் பதிவாகும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : பரத்பூர் நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 31 டிகிரியும், குறைந்தபட்சமாக 5 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.