Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» போஜ்பூர் (பீகார்)

போஜ்பூர் (பீகார்) - இறந்த காலத்தை நோக்கி ஒரு பயணம்!

7

பீகாரில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று போஜ்பூர். இதன் நிர்வாக தலைமையகமாக அறாஹ் உள்ளது. வனம் என்று பொருள் தரும் ஆரண்யா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது தான்  அறாஹ். போஜ்பூருடன் பல புராண கதைகள் சம்பந்தப்பட்டுள்ளது. ஹிந்து புராணத்தின் படி, ராமபிரானின் குடும்ப குருவாக விளங்கிய ரிஷி விஷ்வாமித்ரர் இந்த இடத்தில் சில காலங்கள் தங்கியுள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகத்தில் போஜ்பூர் முக்கிய பங்கு வகித்திருப்பதால் இன்றைய காலகட்டத்திலும் கூட இந்த இடம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பல முக்கிய வீரர்களின் பிறப்பிடமாக விளங்குகிறது இந்த மாவட்டம். சண் மற்றும் கங்கா நதிகள் தான் இந்த மாவட்டத்தின் நீர் தேவைக்கு மூலாதாராமாக விளங்குகிறது.

போஜ்பூர் சுற்றுலா அதன் வளமையான இலக்கியத்துக்காகவும் சினிமாக்காகவும் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. காலம் காலமாக இலக்கிய துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது போஜ்பூர்.

முன்ஷி சடசுக் லால், சய்யத் இஷௌடுல்லா, லல்லு லால் மற்றும் சடல் மிஷ்ரா போன்றவர்கள் தங்களின் படைப்பான 'கரி போலி'-க்காக புகழ் பெற்றுள்ளனர்.

தன்னுடைய தனித்துவமான படைப்புகளால் போஜ்பூரி சினிமாவுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. போஜ்பூரி சினிமா படங்களை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் பறந்து விரிந்து கிடக்கிறது.

விவசாய நகரமான போஜ்பூரில் முக்கியமாக நெல், கோதுமை மற்றும் எண்ணெய் வகை பயிர்கள் தான் அதிகமாக பயிரிடப்படுகிறது. பயிர்களின் பாசன வசதிகளுக்கு நதிகளின் நீர் பயன்படுத்தப்படுகிறது.

இதன் வரலாற்று சிறப்பம்சம் போஜ்பூரின் சுற்றுலா துறையை வெகுவாக வளர்த்துள்ளது. இன்னும் கூட குதிரை வண்டிகளை போஜ்பூரில் காண நேரிடலாம்.

போஜ்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

ஜக்திஷ்பூரில் உள்ள வீர் குன்வர் சிங் கிலா, அராவில் உள்ள மகாராஜா கல்லூரி, மகாதேவாவில் உள்ள ஜெயின் மந்திர் மற்றும் ஆரண்ய தேவி கோவில் தான் இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

இந்த மாவட்டத்தில் வானிலை சற்று உச்சத்திலேயே இருக்கும். முக்கியமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பம் அதிகமாக காணப்படும்.

போஜ்பூரின் வானிலை

போஜ்பூரின் வானிலை கடுமையான வெப்பத்துடன் ஈரப்பதத்துடன் விளங்கும். இருப்பினும் குளிர் காலத்தில் குளுமையாக இருக்கும்.

போஜ்பூரை அடைவது எப்படி?

போஜ்பூரை இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

போஜ்பூர் (பீகார்) சிறப்பு

போஜ்பூர் (பீகார்) வானிலை

சிறந்த காலநிலை போஜ்பூர் (பீகார்)

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது போஜ்பூர் (பீகார்)

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu