போஜேஷ்வர திருக்கோவிலின் அருகே அமைந்திருக்கும் ஜைன திருக்கோவிலும், கட்டி முடிக்கப்படாத ஒரு கோவிலாகும். போஜேஷ்வர கோவிலில் இருந்தது போலவே ஜைன கோவிலிலும் மணற்கற்களால் ஆன வளைவைக் காண முடிகிறது.
அன்பையும், வெறுப்பையும் வென்று ஜைன சாம்ராஜ்யத்தை நிறுவுபவர் தீர்த்தங்கரா எனப்படுவர். அவ்வாறு நிறுவிய மூன்று தீர்த்தங்கரர்களின் சிலைகளைக் கொண்டுள்ளது ஜைன கோவில்.
அவற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது 20 அடி உயரம் கொண்ட மஹாவீரரின் திருவுருவச் சிலையாகும். மற்ற இரண்டும் பரஸ்வநாதரின் சிலைகளாகும்.
செவ்வக வடிவத்தில் இருக்கும் இத்திருக்கோவிலில் போஜர் அரசரைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. மேலும் பக்தமர ஸ்தோத்திரத்தை இயற்றிய ஆச்சார்ய மான்துங்காவின் சிலையும் இந்த கோவிலில் இருக்கிறது.



Click it and Unblock the Notifications