இந்தியாவிலுள்ள பிரம்மனுக்கு உரிய ஆலயங்களில் இந்த ஆதி பிரம்ம ஆலயம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. புண்டரிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள கோகான் என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
மரத்தால் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரம்மாவின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இரண்டு பக்கமும் மோராக்களின் குதிரை வண்டிகள் உள்ளன.
இந்த மோராக்களின் சிலைகள் வெள்ளி மற்றும் ஐம்பொன் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் விஷ்ணு கடவுளின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அதோடு இந்த ஆலயத்தின் மேற்கூரை பகோடா கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
இந்த ஆலயத்தின் முக்கிய கதவுகளில் எல்லாம் புராணக் கதைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த ஆலயத்தின் இரண்டு பக்கமும் கார் ஜோக்னி மற்றும் மணிகரம் ஜோக்னி ஆகிய இரணடு ஆலயங்கள் உள்ளன.
நாகினி பிர்சு, கோகான் திருவிழா, மோகல் திருவிழா, புலாங் பிர்சு போன்ற திருவிழாக்கள் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications