பிகானேர் பகுதியிலுள்ள இந்த ‘கலிபங்கன்’ எனும் ஸ்தலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள இடிபாட்டு மிச்சங்கள் வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய காலம் குறித்த தகவல்களின் காட்சியாக விளங்குகின்றன.
இந்த ஸ்தலத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் பலனாக ‘இண்டஸ் பள்ளத்தாக்கு’ நாகரிகத்தின் மேன்மை மற்றும் உன்னதங்கள் குறித்த பல உண்மைகள் தெரியவந்துள்ளன.
வரலாற்று காலத்துக்கு முற்பட்ட சமாதி மேடுகள், உழவு செய்யப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு வாழ்வியல் கருவிகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மிக நுட்பமான நீர்ச்சேகரிப்பு முறையினை அக்காலச்சமூகம் பெற்றிருந்தது இங்கு காணப்படும் இடிபாட்டுப் படிவுகளிலிருந்து புலனாகிறது. இந்தியப்பாரம்பரியம் மற்றும் வரலாற்றில் ஆர்வம் கொண்டுள்ள எவரும் இந்தியாவின் முதல் புராதனகால நகரம் என்ற புகழைப்பெற்றுள்ள இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்வது அவசியம்.



Click it and Unblock the Notifications