1902ம் ஆண்டில் கங்கா சிங் எனும் மன்னரால் இந்த லால்கர் அரண்மனை சிவப்புக்கற்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது. தன் தந்தையான லால் சிங் ராஜாவின் ஞாபகார்த்தமாக அவர் இந்த அரண்மனையை நிர்மாணித்துள்ளார்.
புகழ் பெற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வடிவமைப்பாளரான சர் ஸ்விண்டன் ஜேக்கப் என்பவர் இந்த கோட்டையை ராஜபுதன, முகலாய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களை கலந்து வடிவமைத்துள்ளார்.
சிவப்புக்கல்லால் ஆன சரிகைச்சித்திர பின்னல் வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும் சல்லடைச்சாளரங்கள் இந்த அரண்மனையின் முக்கிய கவர்ச்சி அம்சமாகும். வெளிநோக்கி நீண்டு காட்சியளிக்கும் அலங்கார பலகணிகள் அவற்றின் கலையம்ச வேலைப்பாடுகள் மூலம் பயணிகளை பிரமிக்க வைக்கின்றன.
பலவிதமான பொகய்ன்வில்லா பூச்செடிகள் மற்றும் தோகை விரித்து ஆடும் மயில்கள் இங்குள்ள நந்தவனத்திற்கு அழகு சேர்ப்பது குறிப்பிடத்தக்கது. பிகானேர் நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்தில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் இந்த அரண்மனையை அரசுப்பேருந்துகள் மூலம் பயணிகள் வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications