பிகானேர் நகரத்தின் மிகப்பழமையான வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக இந்த லட்சுமிநாத் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. பிகானேர் நகரத்திற்கான அடிக்கல்லை இந்த கோயில் ஸ்தலத்தில் மன்னர் ராவ் பிகாஜி 1488ம் ஆண்டில் நாட்டியுள்ளார்.
இந்த வரலாற்று முக்கியத்துவத்தின் காரணமாக இது பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. இந்த ஸ்தலத்திலுள்ள கோயிலை ராவ் லுங்கரன் எனும் மன்னர் கட்டியுள்ளார்.
விஷ்ணுக்கடவுள் மற்றும் அவரது துணைவியார் லட்சுமி தேவிக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அற்புதமான கட்டமைப்புடன் காட்சியளிக்கும் இந்த லட்சுமிநாத் கோயில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளையும் பக்தர்களையும் ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications