கங்கை நதிக் கரையில், கன்னௌஜ் ரோட்டில் அமைந்திருக்கிறது பிரம்மாவர்த் காட். வரலாற்று மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த இடம் பிரம்மாவர்த் காட். பிரம்மதேவன், முதன் முதலில் மனிதனைப் படைக்க தேர்ந்தடுத்த இடம் பித்தூர்.
இதனால் இந்த இடத்திற்கு பிரம்மவர்த்தா அல்லது பிரம்மனின் இருப்பிடம் என்றும் சொல்வதுண்டு. பிறகு, பிரம்ம தேவன், இங்கு ஒரு சிவலிங்கத்தை நிறுவினார். இன்றும் பிரம்மேஸ்வர மகாதேவர் என மக்கள் அன்போடு வழிபடுகின்றனர்.
இவ்விடத்தில் குதிரையின் நகம் ஒன்று பொதிக்கப்பட்டுள்ளது. இது பிரம்மதேவனுடைய குதிரையின் நகம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications