மகாரிஷி வால்மீகி இங்கு தான் ராமாயண காவியத்தை எழுதினார். ராமபிரான், சீதாவை ஏற்க மறுத்த பின்பு சீதா தேவி வால்மீகி ஆஸ்ரமத்தில் தான் தங்கி இருந்தார். இங்கு, சீதா தேவிக்கு லவன், குசன் என இரண்டு மகன்கள் பிறந்தனர்.
அவ்விருவரும் இலக்கியம், கல்வி, போர் போன்ற யுக்திகளை வால்மீகி ஆஸ்ரமத்தில் பயின்றனர். இந்த ஆஸ்ரமம் கொஞ்சம் உயரத்தில் இருப்பதால், படிகள் மூலமாக ஏறித் தான் செல்ல முடியும். இந்தப் படிகளை, சொற்கத்தின் படிகட்டுகள் எனவும் கூறுவர்.
அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்து எழில் கொஞ்சும் இயற்கைகாட்சிகளை ரசிப்பது மனதுக்கு அமைதியும், நிம்மதியும் அளிக்கிறது.



Click it and Unblock the Notifications