சௌராஸி கம்போன் கி சாத்ரி என்பது 84 தூண்களுடன் கூடிய ஒரு விதான மண்டபமாகும். இது ராவ் அனிருத் சிங் மன்னரால் 1740 ம் ஆண்டு தேவா எனும் தாதியின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளைக்கொண்ட ஒரு உயரமான பீட அமைப்பின் மீது இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த விதான மண்டபம் நினைவுச்சின்னமாகவும் அதே சமயம் ஒரு பிரார்த்தனைக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
17ம் நூற்றாண்டைச்சேர்ந்த ராஜபுத்திர மன்னர்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் பல சிற்ப வடிப்புகள் இங்குள்ள தூண்களில் காணப்படுகின்றன. இந்த நினைவுச்சின்ன அமைப்பில் உள்ள கர்ப்பகிருகத்தின் அடித்தளப்பகுதியில் பலவித விலங்குகளின் உருவங்களும், மற்றும் இரண்டாவது தளத்தில் நான்கு புறமும் சிறிய மாடங்கள் சூழ அமைந்திருக்கும் வட்டமான குமிழ் கோபுர அமைப்பும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications