1907-ஆம் ஆண்டு பாந்தவா மலைகளில் கட்டப்பட்ட குருத்துவாரா சாஹிப், சைல் பஜாரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத்தலமாகும்.
சீக்கிய வழிபாட்டுத்தலமாக இருந்தாலும், இந்த குருத்துவாராவின் சில கட்டிடக்கலை அமைப்புகள் கோவாவில் உள்ள சர்ச்சுகளின் அமைப்பை நினைவுபடுத்துவதாக இருக்கும்.
இங்கிருக்கும் பசுமையான புல்வெளிப் பரப்பையுடைய மஞ்சள் நிற வடிவமைப்பு பார்வையாளர்களின் கண்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். தினந்தோறும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் இந்த குருத்துவாராவின் நுழைவாயிலை ஒரு இரண்டடுக்கு கோபுரம் தாங்கியபடி உள்ளது.



Click it and Unblock the Notifications