Search
  • Follow NativePlanet
Share

சண்டேல் - மியான்மரின் நுழைவாயில்!

7

மணிப்பூரின்  ஒன்பது மாவட்டங்களில் ஒன்றான சண்டேல் இந்தோ-மியான்மார் எல்லையில் அமைந்து அருகில் உள்ள பல இடங்களுக்கு நுழைவு வாயிலாக இருந்து வருகின்றது. சண்டேல் நகரமாக இருக்கும் சண்டேல் மாவட்டத்தில் மோரே, சக்பிகரொங் சண்டேல் மற்றும் மாச்சி போன்ற உட்பிரிவுகளை கொண்டுள்ளது.

சண்டேல் மாவட்டத்தின் தெற்கே மியான்மாரும், கிழக்கில் உக்ரல், மேற்கில் மற்றும் தெற்கில் சூரசந்த்பூர் மற்றும் வடக்கில் தவ்பால் போன்ற மாவட்டங்கள் அமைந்திருக்கின்றன.

1974 ஆம் ஆண்டு சண்டெல் தெங்னெளவ்பால் என்ற பெயரில் அறியப்பட்டு பின்பு 1983 ஆம் ஆண்டு சண்டேல் என்ற பெயரைப் பெற்றது. மணிப்பூரின் மிகவும் குறைந்த அளவிளான மக்கள் தொகையைக் கொண்ட இடம் இது.

ஆரம்பத்தில் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்  சண்டெல் மாவட்டதை இந்நாட்டின் மிகவும் பிந்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. இதனால் இவ்விடம் ஆண்டுதோரும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான நிதி திட்டத்தின் மூலம் நிதியை பெற்று வருகின்றது.

வடகிழக்கு பகுதிகளில் ட்ரான்ஸ்-ஆசிய சூப்பர் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் சண்டெல் முக்கிய நகரமாக அறியப்படுகின்றது. நெடுஞ்சாலை செயல்படுமேயானால் மிக விரைவில் சண்டேல் பல ஆசிய நாடுகளுக்கு நுழைவாயிலாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல்லுயிர்வாழ்வினங்கள்

இயற்கை தாயால் ஆசீர்வதிக்கப்பட்ட சண்டேல் மாவட்டத்தில் பலவித தாவரங்களையும் விலங்குகளையும் காணலாம்.  வண்ணக் கொத்து மலர்களும், அலங்காரச் செடி கொடிகளும் காண்போரை ஈர்க்கும்.

அனிசொமிலெஸ் இண்டிகா (Anisomeles Indica), அனோடிஸ் பீட்டிகா (Anotis foetida), கிராஸ்செஃபாலும் கிரிபிடியோடஸ் (Crasscephalum crepidiodes )போன்ற அரிய வகை தாவரங்களையும் இங்கு காணலாம். இதை தவிர மருத்துவத் தன்மை கொண்ட உள்ளூர் மூலிகை தாவரங்களும் இங்கு பிரபலம்.

இங்கு பல அரிய வகை விலங்கினங்களையும் காண முடியும். இந்தியாவில் உள்ள ஒரே வாலில்லா ஹாலாக் கிப்பன் வகைக் குரங்கினை இங்கு காண முடியும்.  ஸ்லோ லோரிஸ், ஸ்டம்ப்டு வால் மெக்கேக், பன்றி வால் மெக்கேக் போன்ற விலங்கிணங்களும் இங்குள்ளன.

இங்கு சிறுத்தை மற்றும் கோல்டன் கேட் ஊனுண்ணிகளையும் காணலாம். வானிலையின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கான மியான்மரின் அருகில் உள்ள இடங்களில் இருக்கும் யானைகள் இங்கு தஞ்சம் அடைகின்றன. 

இந்த பல்லுயிர் வாழ்வினங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. மணீப்பூரின் இந்த பின்தங்கிய கிராமத்தின் அழகையையும் உயிரினங்களையும் காண்பதற்காகவே உலகின் பல்வேறு இடங்கலிலிருந்து மக்கள் இங்கு சுற்றுலா வந்து, இயற்கை அழகில் மறைந்து விட ஆசைகொள்கின்றனர்.

சண்டேல் மற்றும் அதை சுற்றியுள்ள வர்த்தக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

மியான்மரின் நுழைவாயிலாக இருக்கும் காரணத்தால் முக்கியமான நகரமாக கருதப்படும் மோரே நகரம் மணிப்பூரின் முக்கிய வர்த்தக தலமாக விளங்குகின்றது. இது சண்டேல் நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தோ-மயண்மரில் மிக உயரத்தில் இருக்கும் காரணத்தால் சண்டேலின் மற்றொரு இடமான தெங்நோபால் முக்கிய இடமாகக் கருதப்படுகின்றது. இவ்விடம் சண்டேலிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. இங்கு உயரத்திலிருந்து மணிப்பூரின் பல இடங்களைக் காணமுடியும்.

வேற்றுமையில் ஒற்றுமை

வடகிழக்கு பகுதிகளில் பல பழங்குடியினர் ஒற்றுமையாக வாழும் இடங்களில் சண்டேலும் ஒன்று. இங்கு தலைமுறை தலைமுறையாக 20 பழங்குடி சமூகங்கள்  வாழ்ந்து வருகின்றனர்.

மயோன், அனல், மாரிங், குகிஸ், பைட், சோதெ மற்றும் தாடு போன்ற பழங்குடியினர் இங்கு காணப்படும் முக்கிய பழங்குடியினர் ஆவர். பாரம்பரியமாக இங்கு வாழ்ந்து வரும் பழங்குடியினரை தவிர மற்ற இடங்களிலிருந்து வரும் பழங்குடி மக்களுக்கு இவ்விடம் வாழ்வளித்து வருகின்றது.

இங்கு அதிக அளவில் மெய்தீஸ் மற்றும் மெய்தீஸ் பங்கள் இனத்தவரை காணலாம். தலைமுறையாக இங்கு மணிப்பூரி அல்லாத இனத்தவரான நேப்பாலீஸ், பெங்காலி, தமிழ், பஞ்சாபி, பீஹார் மக்கள் போன்றோரையும் காண முடியும்.

இங்கு பல மொழிகள் பேசப் பட்டாலும் சண்டேல் மற்றும் தாடு இங்கு பெரும்பான்மையாக பேசப்படுகின்றது. இங்கு பரவலாக பேசப்படும் மற்றொரு மொழி சினோ-திபித்தன் மொழியான அய்மோல்.

இங்கு இம்மொழி அனல் என்ற பழங்குடியினரால் பேசப்படுகின்றது. சண்டேலின் அழகிற்கு நிறம் சேர்க்கும் பல்வேறு மொழிகளுக்கும் ஒற்றுமையோடு வாழும் இனத்தவருக்கும் நன்றி. சண்டேல் லம்க்கா என்றும் அறியப்படுகின்றது என்பது கூடுதல் தகவல்.

சண்டல் செல்வதெப்படி?

சண்டேலை அடைய சாலை வழி, ரயில் மற்றும் விமான போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.

சண்டல் செல்ல சிறந்த காலம்

குளிர்காலத்தின் தொடக்கக் காலமே சண்டேல் செல்ல சிறந்த காலமாகும்.

சண்டேல் சிறப்பு

சண்டேல் வானிலை

சிறந்த காலநிலை சண்டேல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சண்டேல்

  • சாலை வழியாக
    மோரே வரை சண்டல் மாவட்டத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை-39 இயங்குகின்றது. மாவட்டத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல பேருந்து வசதிகளும் தனியார் டாக்ஸிகளும் இயங்குகின்றன. பாலெலில் NH39-லிருந்து மாநில நெடுஞ்சாலை வளைவும் இங்குள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் தலைமை இடமான சண்டேலை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மணிப்பூரில் தலைமை ரயில் நிலையம் இல்லை. சண்டேலுக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் நாகலாந்திலுள்ள திமாபூரில் உள்ளது. சண்டேலிலிருந்து திமாபூர் செல்ல 215 கீலோ மீட்டர் தொலைவாகும். திமாபூரை அடைந்தவுடன் சண்டேலுக்குச் செல்ல டாக்ஸி மற்றும் மாநில பேருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். குவஹாதி வழியாக நாட்டின் எல்லா இடங்களுக்கும் செல்ல திமாபூர் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சண்டலுக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் இம்பால் விமான நிலையம். இம்பால் நகரத்தின் மையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் மற்றும் சண்டேலில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்பால் விமான நிலையம் கவுகாத்தி வழியாக நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. இம்பாலுக்கு வரும் எல்லா விமானங்களும் கவுகாத்தியில் கண்டிப்பாக இறங்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed