கொர்லை கோட்டை மோரோ மற்றும் கேஸ்டில் கர்லூ என்ற பெயர்களிலேயே பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோட்டை போர்த்துகீசியர்களால் 1521-ஆம் ஆண்டு, கொர்லை நகரத்தின் தீவு கிராமமான மோரோ டி சாவ்லில் கட்டப்பட்டது.
சாவ்ல் கோட்டையின் வடிவத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோட்டை கொர்லையிலிருந்து, பஸ்ஸெய்ன் வரை நீண்டு செல்கிறது. இது ரேவ்தந்தா துறைமுகத்தை பாதுகாக்கும் பொருட்டு, துறைமுகம் செல்லும் வழியை மறைத்து கட்டப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 7000 குதிரைகளை அடைக்கக் கூடிய அளவுக்கு பெரிதாகவும், பலமானதாகவும் கட்டப்பட்டுள்ள கொர்லை கோட்டை, உலகின் மிகச் சிறந்த கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications