Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சென்னை » ஈர்க்கும் இடங்கள் » ஜகன்னாத் கோயில்

ஜகன்னாத் கோயில், சென்னை

58

ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காகவே அதன் நகல் வடிவமாக இந்த சென்னை ஜகந்நாத் கோயில் கட்டப்பட்டிருக்கிறது எனலாம்.

கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து சற்றே விலகி ரெட்டிகுப்பம் சாலையில் கானாத்தூர் கிராமப்பகுதியில் இந்த புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஜகந்நாதர், சுபத்ரா தேவி மற்றும் பலராமர் ஆகியோரின் சிலைகளை தரிசிக்கலாம். யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.

பூரி ஜகந்நாதர் கோயிலை எல்லாவிதத்திலும் ஒத்திருக்கும் இக்கோயில் வெண் சலவைக்கற்களாலும், கருப்புப்பளிங்குகற்களாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  காஞ்சிபுரத்திலிருந்து கருங்கல்லும் ராஜஸ்தானிலிருந்து வெண் சலவைக்கற்களும் இக்கோயிலுக்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் விக்கிரகங்களும் பூரி கோயிலில் உள்ளவற்றைப்போன்றே வேப்ப மரத்தின் மரத்துண்டுகளை கடைந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பிரம்மாண்டமான பரப்பளவில் அழகாக பராமரிக்கப்படும் பசுமையான செடிகளையும் பலவண்ண மலர்களையும் கொண்டுள்ள நந்தவனத்தின் நடுவே இக்கோயில் வளாகம் வீற்றிருக்கிறது. நகர சந்தடியிலிருந்து விலகி அமைதியையும் ஆன்மீக சூழலையும் வழங்கும் அற்புத ஸ்தலமாக இந்த ஜகன்னாத் கோயில் வீற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue