Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சென்னை » ஈர்க்கும் இடங்கள் » கபாலீசுவரர் கோயில்

கபாலீசுவரர் கோயில், சென்னை

58

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேண்டுவதை அருளும் ‘கற்பகாம்பாள்’ ஆக இங்கு பார்வதி தேவியார் வணங்கப்படுகிறார்.

கபால – ஈஸ்வரன் என்ற பெயரே கபாலீஸ்வரர் என்று திரிந்து வழங்கி வருகிறது. ஐதீக புராணக்கதைகளின்படி கைலாச மலையில் பிரம்மா கடவுள் ஈசனின் வலிமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதில் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை (கபாலத்தை) திருகி கொய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தன் தவறை உணர்ந்த பிரம்மா இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டதாக இந்த புராணக்கதை முடிகிறது.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொன்மையான கோயிலின் ஆதி அமைப்பானது 7ம் நூற்றாண்டில் கடற்கரையை ஒட்டி பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கான ஆதாரங்கள் திருஞானசம்பந்தரின் பாடல்களில் கிடைக்கின்றன. தற்போதைய சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால்  சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் கட்டுமானம் திராவிட பாணி கோயிற்கலை அம்சங்களையே தாங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri