Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சென்னை » ஈர்க்கும் இடங்கள் » பார்த்தசாரதி கோயில்

பார்த்தசாரதி கோயில், சென்னை

58

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பஹவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பிரசித்தமான பார்த்தசாரதி கோயில் சென்னையில் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளது.

8ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் ஆழ்வார் பாசுரங்களில் பாடப்பட்டிருக்கும் பெருமையையும் கொண்டுள்ளது. வைணவ மரபின் 108 திவ்ய ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்த்தசாரதி எனும் பெயருக்கு – பார்த்தனின்(அர்ஜுனன்) சாரதி (தேரோட்டி) என்பது பொருளாம். அதாவது மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாகவும் உபதேசியாகவும் இருந்து தர்மத்தை வென்றிட வைத்திட்ட பார்த்தசாரதி எனும் கிருஷ்ணபஹவானுக்காகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரால் இக்கோயில் கட்டத்துவங்கப்பட்டு சோழ மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கிருஷ்ணர், நரசிம்மர், ராமர் மற்றும் வராஹமூர்த்தி போன்ற மஹாவிஷ்ணு அவதாரங்களின் சிலைகளை இக்கோயிலில் பக்தர்கள் தரிசிக்கலாம். ராமர் மற்றும் நரசிம்மர் கோயில்களுக்குக்கு தனித்தனி வாசல்கள் உள்ளன.

சென்னை நகரின் மிகப்பழமையான வரலாற்றுச்சின்னமாகவும் ஆன்மீகத்தலமாகவும் இந்த பார்த்தசாரதி கோயில் வீற்றிருக்கிறது. பல நுணுக்கமான அலங்காரக்குடைவு வேலைப்பாடுகளை இக்கோயிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்களில் காணலாம்.

தென்னிந்திய கோயிற்கலை மரபின் எல்லா கலையம்சங்களையும் இந்த கோயிலிலுள்ள மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுர அமைப்பு, தீர்த்தக்குளம் போன்றவற்றில் காணலாம்.

தமிழ் மொழியின் நவீன கவிஞரும் சிந்தனையாளருமான மஹாகவி பாரதி தனது 39 வது வயதில் இந்த கோயில் யானைக்கு உணவு வழங்கும்போது எதிர்ப்பாராவிதமாக யானையால் தாக்கப்பட்டு உடல்நலம் குன்றி இறந்தார் என்பது - ஒரு முக்கியமான வரலாற்று தகவலும்கூட.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue