சிவபுரி என்று தற்போது அழைக்கப்படும் இந்த திருநெல்வாயில் எனும் சிவத்தலமானது சிதம்பரத்திற்கு அருகில் 3 கி.மீ தூரத்தில் அண்ணமலைநகர் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது.
இந்த ஊரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உல்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் உச்சிநாதர் அல்லது மத்யானேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பால்வண்ண நாதர் என்ற மற்றொரு சன்னதி மற்றும் நடராஜர் சிவகாமியுடன் காட்சியளிக்கும் சன்னதி போன்றவற்றையும் இந்த கோயில் வளாகத்தில் தரிசிக்கலாம். இந்த ஸ்தலத்தில் உறையும் தேவியின் பெயர் கனகாம்பிகை என்பதால் உள்ளூர் மக்கள் கனகாம்பிகா கோயில் என்றே இதனை அழைக்கின்றனர்.
தேவாரப்பாடல்களில் பாடப்பட்டுள்ள இந்த தலத்தில் குழந்தைக்கு முதற்சோறூட்டினால் எக்காலத்திலும் அக்குழந்தையின் வாழ்வில் பட்டினி நிகழாது என்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.



Click it and Unblock the Notifications