வீரமும் அழகும் பொருந்திய பத்மினி ராணியார் வசித்த அரண்மனையே இந்த பத்மினி அரண்மனை ஆகும். கம்பீரமான சித்தோர்கர் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள இது பத்மினி ராணியாரின் வீரம் மற்றும் நளினத்திற்கு சான்றாகவும் நிலைத்து நிற்கிறது.
இந்த அரண்மனைக்கு அருகில் ஒரு அழகிய தாமரைக்குளம் உள்ளது. இந்த இடத்தில்தான் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு ராணியாரின் அழகை தரிசிக்கும் அனுபவம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
ராணியாரின் அழகில் மதிமயங்கிய சுல்தானின் ஆசையே பின்னர் யுத்தமாக முடிந்துள்ளது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த அரண்மனையானது சுற்றிலும் எழில் மிளிரும் இயற்கைச்சூழலையும் பெற்றுள்ளது. சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள நீலகண்ட மஹாதேவ் கோயில் இந்த அரண்மனைக்கு அருகில் உள்ளது.



Click it and Unblock the Notifications