துரூக் கோட்டை ஒரு சிதிலமடைந்த கோட்டையாகும். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாதலமாக குன்னூரில் விளங்குகிறது. இங்கிருந்து சுற்றுப்புறங்களில் உள்ள இடங்கள் தெளிவாக காணக்கிடைப்பதால் இது திப்பு சுல்தானின் புறங்காவல் கோட்டையாக விளங்கியது.
இதன் அமைப்பு எதிரிகளை விரட்டி அடிக்க வாகாக இருந்தது. இப்போது எஞ்சியுள்ளது ஒரு சிதிலமடைந்த சுவர் மட்டுமே. இருப்பினும் வானிலிருந்து பார்க்கையில் கோட்டையின் அமைப்பு நன்றாகக் காணக் கிடைக்கிறது.
இந்தக் கோட்டைக்கு வர நான்கு கி.மீ. தூரம் "நான்சுச் எஸ்டேட்" மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இங்கிருந்து சமவெளிகளை நன்றாகக் கண்டு ரசிக்கலாம்.
நிறைய பறவைகள் வருவதால் பறவைகளைக் கண்டு ரசிக்க ஏற்ற இடம். எஸ்டேட் வழியாக மலைப்பாதையில் வரும்போது இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications