கார்பெட் தேசிய பூங்காவின் அழகிய நிலப்பகுதிகளில் பைக் சவாரி செய்வது ஒரு அற்புதமான பொழுதுபோக்கைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பைக் சவாரிகளின் மூலமாக பார்வையாளர்கள் கானகத்தின் உள்பகுதிகளுக்கும், அங்குள்ள வனவாசி கிராமங்களுக்கும் சென்றிட முடியும்.
பைக்குகளில் சென்று இந்த பூங்காவைச் சுற்றிப் பார்ப்பதற்கு உதவும் வகையில் தொழில்முறை வழிகாட்டிகளும் உள்ளனர். மேலும், மலைகளில் பைக் ஓட்ட விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய சொந்த பைக் அல்லது வாடகை பைக்குகளைப் பயன்படுத்தி இந்த பூங்காவில் பைக் சவாரி செய்ய முடியும்.



Click it and Unblock the Notifications