குமாவோன் மலைகளில் அடிவாரத்தில் கியாரி நகரத்தில் தான் கியாரி என்ற முகாமிடம் அமைந்துள்ளது. இமாலய மலைப் பகுதிகளிலுள்ள இந்த கிராமத்தில் பாரம்பரியமான கிராமப்புற வாழ்க்கையை இயற்கை சுற்றுப் பயணத்துடன் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் அனுபவித்திட முடியும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2800 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த முகாமிடம், கார்பெட் தேசிய பூங்காவையே மறக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது.
மலைச்சரிவில் பாவ்ர் என்ற ஓடையையொட்டி உள்ள இயற்கைப் பண்ணையில் தான் இந்த முகாமிடம் உள்ளது. இந்த முகாமில் மண் குடிசைகள், வேலைப்பாடுகளமைந்த பாய்கள் மற்றும் தூங்கத் தேவையான பைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
வலையாலான தொட்டில் படுக்கைகள், ஊஞ்சல் படுக்கைகள், ட்ரிப்ட் வுட் மற்றும் கேம்ப் பையர் உபகரணங்கள் ஆகியவற்றை ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். எரிசக்தியின் சேமிப்பிற்காக இந்த இடத்தில் சோலார் லாந்தர் விளக்குகள் பயன்படுத்தப் படுகின்றன.



Click it and Unblock the Notifications