இந்தியா மற்றும் நேபாளத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் கோசி ஆறு, அதன் இறுதியில் மலையுச்சிகளில் முடிகிறது. இந்த உயரமான மலையுச்சிகள் வடக்கிலிருந்து யார்லுங் ட்சாங்போ நதியுடன் கோசி ஆறு கலப்பதை தடுக்கும் தடுப்பணைகளாக உள்ளன.
சப்தகோஷி அல்லது கோஷி என்ற பெயரிலும் அழைக்கப்படும் கோசி ஆறு, கடந்த 250 ஆண்டுகளில் மேற்கிலிருந்து கிழக்காக சுமார் 120 கிலோ மீட்டர்களுக்கு தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டுள்ள ஆக்ரோஷமான ஆறாகும்.
ரிக் வேதத்தில் கௌசிகா என்று அழைக்கப்படும் இந்த ஆறு, மகாபாரதத்தில் கௌசிகி என்று அழைக்கப்படுகிறது. பின்னர் 7 ஆறுகளின் இணைவாக சொல்லப்பட்ட இந்த ஆறு சப்தகோஷி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தது.
கோசி ஆறு சுற்றுலாப் பயணிகளுக்கு மீன்பிடிக்கும் வசதிகளை ஏற்படுத்தி தரும் ஆறாக உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் மற்றும் பிப்ரவரி முதல் ஜுன் ஆகிய மாதங்கள் இந்த ஆற்றிற்கு வந்து செல்ல மிகவும் ஏற்ற மாதங்களாகும்.
கோசி நதியில் மீன் பிடிக்க அனுமதி பெறும் வேலையை இங்குள்ள விடுதிகள் செய்து தருகின்றன. மழைக்காலங்களில், அபரிமிதமான மழைத் தண்ணீரால் பெருக்கெடுத்து ஓடும் இந்த ஆற்றின் கரைகளில் நிறைய தடுப்புகளைக் காண முடியும்.
எனவே தான், இந்த ஆற்றின் ஓட்டம் நிலையானதாக இல்லாமல், அவ்வப்போது இதன் பாதை மாறி ஓடுகிறது. இது மட்டுமல்லாமல், இந்த ஆறு பீகார் மற்றும் பங்களாதேஷில் மழைக்காலங்களில் பெரும் வெள்ள சேதத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications