கார்பெட் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான பிரபலமான விளையாட்டாக ரிவர் ராஃப்டிங் விளங்குகிறது. தன்னுடைய வெண்மையான தண்ணீரில் ரிவர் ராஃப்டிங் செய்யும் வசதிகளை கோசி ஆறு சிறப்பாக செய்து வருகிறது.
இந்த தேசிய பூங்காவில் ரிவர் ராஃப்டிங் செய்ய ஏற்ற பாதுகாப்பான இடமாக கோசி ஆறு உள்ளது. ஆற்றையொட்டி அமைந்துள்ள பல்வேறு விடுதிகளும் ராஃப்டிங் செய்வதற்கான உபகரணங்களை நியாயமான விலைகளில் வழங்கி வருகின்றன.
இந்த ஆற்றைச் சுற்றிலும் மலை முகடுகளும், உயரமான மலைச்சிகரங்களும் அமைந்துள்ளன. மேலும், இந்த ஆற்றின் கரைகளில் பசுமையான காய்ர், தேக்கு, சால் மற்றும் ரோஸ்வுட் மரங்கள் படர்ந்துள்ளன.
கோசி நதியில் பல்வேறு விடுதிகளும் வேறு வேறு விதமான கட்டணங்களை ராஃப்டிங் செய்வதற்கு நிர்ணயம் செய்துள்ளன. பொதுவாகவே இந்த கட்டணம் ஒரு இரவுக்கு, நபருக்கு ரூ.2000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய பூங்காவில் ரிவர் ராஃப்டிங் செய்வதற்கு ஜுலை முதல் செப்டம்பர் மாதங்களே மிகவும் சிறந்த நாட்களாகும். ரிவர் ராஃப்டிங் மட்டுமல்லாமல் ஆற்றினை கடந்து செல்வது, பாறைகளில் ஏறுதல் மற்றும் ராப்பெல்லிங் போன்ற விளையாட்டுகளும் இங்கே நடத்தப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications