Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்பெட் தேசிய பூங்கா » ஈர்க்கும் இடங்கள் » சோனாநாடி வனவிலங்குகள் சரணாலயம்

சோனாநாடி வனவிலங்குகள் சரணாலயம், கார்பெட் தேசிய பூங்கா

36

கார்பெட் தேசிய பூங்காவின் எல்லையில் உள்ள இடம் தான் சோனாநாடி வனவிலங்குகள் சரணாலயமாகும். ஆசிய யானைகள் மற்றும் புலிகளின் வசிப்பிடமாக உள்ள இந்த சரணாலயம் சுமார் 301.8 ச.கிமீ பரப்பளவில் விரிந்துள்ளது. அருகில் ஓடும் சோனாநாடி ஆற்றின் பெயரால் அழைக்கப்படும் இந்த சரணாலயம், வட இந்தியாவின் மிதவெப்ப மண்டல காடுகளில் ஒன்றாகும்.

சால், ஷிஷம், சீமல், ஹலாடு, குசும், ரோகினி, ஆவோன்லா, ஜமூன், கன்த்பெர், ஃபிக்ஸ், மூங்கில் மற்றும் பக்லி ஆகிய மர வகைகளை இந்த சரணாலயத்தில் காண முடியும். உலக பறவைகளில் 6 கொண்டிருக்கும், 600 பறவையினங்களை இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

த்ரஷ், கரிச்சான் குருவிகள், பீஸன்ட்;ஸ், ஃப்ளை கேட்சர்ஸ், ஹார்ன்பில், வால் கிரீப்பர், ஹாக் கழுகுகள், எமெரால்டு புறாக்கள், இமாலய வட்ட கிங்பிஷர் பறவைகள், இமாலய பிணந்தின்னி கழுகுகள், ஷஹீன் பருந்துகள், பழுப்பு மற்றும் டவ்னி மீன் ஆந்தைகள் ஆகியவை இந்த சரணாலயத்தில் சாதாரணமாக தென்படும் பறவைகளாகும்.

யானைகள், புலிகள், ஊர்வன விலங்கினங்கள், மானிடர் பல்லிகள், ராஜ நாகம், ஆமைகள், கங்கையின் கரியால், மூக்கு முன்பகுதுp அகன்று தெரியும் இந்திய முதலைகள் (Mugger), சிறுத்தை, சம்பார், சீட்டல், குரைக்கும் மான்கள், காட்டுப் பன்றிகள், கோரல் மலையாடுகள், நீர்நாய்கள், முள்ளம்பன்றிகள், மஞ்சள்-தொண்டை மார்ட்டென் மற்றும் தேவாங்கு கரடிகள் ஆகியவை இந்த பகுதிகளில் வசித்து வருகின்றன.

இந்த சரணாலயமும், கார்பெட் தேசிய பூங்காவும் சேர்ந்து கார்பெட் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய புலிகள் காப்பகமாக உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City