டல்ஹெளசியில் இருக்கும் காந்தி சௌக்கிற்கு மேலே 330மீ உயரத்தில் மோடி டிப்பா அமைந்துள்ளது. இயற்கையான முறையில் நடை பழகுவதற்கு (Nature Walk) ஏற்ற இடமாக இது பரிந்துரை செய்யப்படுகிறது.
பைன், பிர் மற்றும் ஓக் மரங்கள் நிறைந்த கானகத்தில் மெதுவாக நடைபயணம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெற்றதை உணருவார்கள். பயணிகள் லாங்கூர் மற்றும் மக்காவ் வகை குரங்குகள் மரத்திற்கு மரம் தாவுவதையும் இங்கு காணமுடியும்.



Click it and Unblock the Notifications