Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேராடூன் » ஈர்க்கும் இடங்கள் » ஸகஸ்த்ரதாரா

ஸகஸ்த்ரதாரா, டேராடூன்

29

ஸகஸ்த்ரதாரா எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் டேராடூன்  நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஸகஸ்த்ரதாரா எனும் பெயருக்கு ‘ஆயிரம் அடுக்கு நீரூற்று’ என்பது பொருள்.

இந்த நீருற்று 9 மீ ஆழம் கொண்டதாக காணப்படுகிறது. பல்தி ஆறு மற்றும் மலைக்குகைகள் போன்றவையும் இந்த நீருற்று ஸ்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளன.

எனவே இது ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக திகழ்கிறது. மழைக்காலத்தில் இந்த இடத்தின் அழகு இன்னும் பசுமையுடன் பிரகாசிக்கிறது. ஆற்றின் பெருக்கெடுத்து ஓடும் நீர் இப்பிரதேசத்தின் எழிலை மேலும் கூட்டுகிறது.

இந்த நீரூற்றில் சல்ஃபர் கலந்திருப்பதால் இதன் நீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தோல் நோய்களால் அவதியுறும் மக்கள் இந்த நீருற்றுக்கு அதிகம் விஜயம் செய்கின்றனர்.

சல்ஃபர் மட்டுமல்லாது இந்த நீரில் சுண்ணாம்பும் அதிகம் உள்ளது. இப்பகுதியில் உள்ள குகைகள் இந்த சுண்ணாம்புப்பாறைகளால் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun

Near by City