1922-ல் விவேகானந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ண மிசனின் கிளையான வித்யா பீடம் விவேகானந்தரின் போதனைகளின்படி சிறுவர்களுக்கு கல்வி அளிக்கிறது. தங்கிப்படிக்கும் பள்ளியாக திகழும் வித்யா பீடத்தின் வளாகம் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது.
மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ராம்கிருஷ்ண மிஷனின் துறவிகளே இந்தப் பள்ளியை பராமரிக்கின்றனர். அதுமட்டுமல்லாது விவேகானந்தரின் ஆன்மீக சொற்பொழிவுகளை புத்தகங்களின் மூலம் இந்த பீடம் பரப்புகிறது.
மருத்துவசேவைகளும் வளாகத்தின் உள்ளேயே உள்ளன. வளாகத்தினுள் கோவில் ஒன்றும், ராமகிருஷ்ண தர்சன் என்ற காட்சியகமும் உண்டு. அருங்காட்சியகம் இருக்குமிடம் சாரதா தர்ஷன் என்றழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications