தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இங்கு கொரவனஹள்ளி எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த மஹாலட்சுமி கோயிலையும் தரிசிப்பது நன்று.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்த கோயிலில் உள்ள மஹாலட்சுமி விக்கிரகம் சுயம்புவாக உருவானதாக சொல்லப்படுகிறது. இங்கு பக்தர்கள் நாக தேவதை மற்றும் மாரிகாம்பா (மாரியம்மா) சிலைகளையும் காணலாம்.
எல்லா அம்மன் கோயில்களையும் போன்று இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இது மட்டுமல்லாமல் பகலில் பக்தர்களுக்கு இலவச உணவும் வழங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications