நாமட சிலுமே, தேவராயனதுர்க்கா

நேரம் இருப்பின் தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த நாமட சிலுமேஎன்றழைக்கப்படும் அதிசய நீருற்று ஸ்தலத்துக்கு சென்று பார்க்கலாம். (நாமட என்பது நெற்றி நாமத்தையும், சிலுமே என்பது ஊற்றையும் குறிக்கிறது) இது தேவராயனதுர்க்கா மலைடிவாரத்தில் அமைந்துள்ளது.

 

புராணக்கதைகளின்படி ராமபிரான் லங்கையை நோக்கி செல்லும்வழியில் இந்த ஸ்தலத்திற்கு வருகை தந்ததாகவும், காலையில் வழிபாட்டுக்கு நாமம் இட்டுக்கொள்ள விரும்பியபோது குழைத்துக்கொள்ள நீரில்லாத காரணத்தால் ஒரு அம்பினை பூமியை நோக்கி எய்ததாகவும், அது இந்த பாறைப்பூமியை துளைத்து ஒரு நீருற்று பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இந்த ஊற்று நாமட சிலுமே என்ற பெயரை பெற்று விளங்குகிறது.

இந்த நீரூற்றின் அருகில் பயணிகள் ராமபிரானின் பாதச்சுவடுகளையும் காணலாம்.இந்த நாமட சிலுமே ஸ்தலத்துக்கு அருகில் 1931ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழைய விருந்தினர் இல்லமும் அமைந்துள்ளது. புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி இந்த விருந்தினர் இல்லத்தில் 1938ம் ஆண்டில் தங்கி தன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

Please Wait while comments are loading...