தேவிகுளம் மலை பகுதிகளின் இடுக்கி குன்றுகளில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மட்டுப்பெட்டி ஏரி அமைதியான சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் குறுக்கே 1940-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மட்டுப்பெட்டி அணை பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
மட்டுப்பெட்டி பகுதி இந்தோ-சுவிஸ் கால்நடை திட்டத்துக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த திட்டத்தின்படி இங்கு 100 வகையான பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
மட்டுப்பெட்டி ஏரியில் மோட்டார் படகு, ஸ்பீட் மற்றும் பெடல் படகுகளில் பயணம் செய்து சுற்றியுள்ள மலைகளையும், ஸ்பைஸ் தோட்டங்களையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.
அதோடு இந்த ஏரியில் எதிரொலிக்கும் பறவைகள் கீச்சிடும் குரல்கள் இன்ப கீதமாய் உங்களுடைய மனதிலும் எதிரொலிக்கும்.எனவே இந்த சுகானுபவத்தை தவற விட்டு விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications