Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» காஞ்சிரப்பள்ளி

காஞ்சிரப்பள்ளி - மத ஒருமைப்பாட்டின் உன்னத அடையாளம்!

8

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரம் காஞ்சிரப்பள்ளி. இந்த நகரத்தில் முன்பு ஏராளமான காஞ்சிம் மரங்கள் காணப்பட்டதால் இதற்கு காஞ்சிரப்பள்ளி என்று பெயர் வந்தது.

காஞ்சிரப்பள்ளி நகரின் பூர்வ குடிமக்களாக கொய்யின் இன மக்கள் அறியப்படுகிறார்கள். இந்த நகரம் பாண்டிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்பும், அதற்கு முன்பும் காஞ்சிரப்பள்ளி நகரில் தமிழ் மக்கள் குடியேறி வாழத் தொடங்கினர்.

இதில் முதன் முதலாக காஞ்சிரப்பள்ளியில் குடியேறியவர்கள் செட்டிநாடு பகுதியை சேர்ந்த கண்ணனூர் செட்டியார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த நகரில் குடியேறிய முக்கால்வாசி தமிழர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள். ஆனால் காஞ்சிரப்பள்ளிக்கு வந்த பின்பு விவாசாயத்தில் ஈடுபடத் துவங்கினர்.

காஞ்சிரப்பள்ளியில் இன்று வசித்து வருபவர்களில் சிரியன் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். இவர்களை தவிர ஹிந்து மற்றும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களும் காஞ்சிரப்பளியில் கிறிஸ்தவ மதத்தினரோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

காஞ்சிரப்பள்ளி நகரின் பிரதான சுற்றுலா அம்சங்களாக கணபதியார் கோயில், செயின்ட் மேரிஸ் தேவாலயம், மதுரை மீனாட்சி கோயில், நைனாரு மசூதி, செயின்ட் டோமினிக் சைரோ மலபார் கத்தோலிக் கத்தீட்ரல் போன்றவை அறியப்படுகின்றன. இவற்றில் காஞ்சிரப்பள்ளியின் கலாச்சாரத்துக்கும், பார்மபரியத்துக்கும் சிறந்த சாட்சியாக திகழ்ந்து வரும் கணபதியார் கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது.

காஞ்சிரப்பளியில் உள்ள பழைய பள்ளி என்று அழைக்கப்படும் செயின்ட் மேரிஸ் பழைய தேவாலயம், இந்தியாவில் கால்வைத்த முதல் வெள்ளையர்களான போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பே 1449-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதுதவிர காஞ்சிரப்பள்ளியில் அமைந்திருக்கும் நைனாரு மசூதிக்கு  ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வந்து செல்கின்றனர். இந்த மசூதி ஹிந்துக் கடவுள் ஐயப்பனின் பக்தராக மாறிய ஒரு இஸ்லாமிய துறவியின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.

காஞ்சிரப்பள்ளி சிறப்பு

எப்படி அடைவது காஞ்சிரப்பள்ளி

  • சாலை வழியாக
    கொச்சியிலிருந்து, காஞ்சிரப்பள்ளி நகரம் 101 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நீங்கள் சாலை வழியாக காஞ்சிரப்பள்ளி நகரை அடைய எப்படியும் ஒன்றரை மணி நேரமாவது ஆகும். மேலும் கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து காஞ்சிரப்பள்ளி நகருக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, வாடகை கார்கள் மூலமாகவும் நீங்கள் எந்த சிரமமுமின்றி காஞ்சிரப்பள்ளி நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    காஞ்சிரப்பள்ளி நகரின் அருகாமை ரயில் நிலையமாக கோட்டயம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், மங்களூர், கொச்சி, டெல்லி போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    காஞ்சிரப்பள்ளி நகருக்கு வெகு அருகில் 98 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக காஞ்சிரப்பள்ளி நகரை அடைந்து விடலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun