ராசலீலா என்பது கிருஷ்ணர் ராதை மற்றும் அவளது தோழிகளுடன் ஆடிய நடனமாகும். மணிப்பூரி மக்களும், கிருஷ்ண பக்தர்களும் வருடந்தோறும் ராச லீலா விழாவை நடத்துகின்றனர். தலாய் பகுதியில் அதிக அளவில் இருக்கும் மணிப்பூர் மக்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்கிறார்கள்.
சலேமா பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய விழா சமீபகாலமாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இவ்விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாக கிருஷ்ணரின் யாத்திரை நிகழ்ச்சி திகழ்கிறது.
கிருஷ்ணரின் களிமண் சிலைகளின் மூலம் அவரது வாழ்க்கையின் பல பரிமாணங்கள் வெளிப்படுத்தப்படுகிறது. கிருஷ்ண பக்தர்கள் பலர் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். தலாய் நகரத்தின் மிகமுக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications