தன்பாத் மாவட்டத்தில் உள்ள இந்த சுற்றுலா தளம் தேசிய நெடுஞ்சாலை2ல் அமைந்துள்ளது. பச்சைப்பசேலென்ற புல்வெளிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஏரி சிறந்த ஓய்வு தளமாக விளங்குகிறது. 214ஏக்கர் பரப்பில் இருக்கும் ஏரிக்கு அருகில் பராஸ்நாத் குன்றுகள் உள்ளன.
டோப்சாஞ்சி ஏரி அடிப்படையில் ஒரு தேங்கிய ஓடையாகும். மாவட்டத்தின் நீர்வசதிக்காக இந்த ஓடை தேக்கப்பட்டு ஏரியாக்கப்பட்டிருக்கிறது. 8.75சதுர கிமீ பரப்பளவு உள்ள டோப்சாஞ்சி வனவிலங்கு சரணாலயத்தில் ஆபத்தில்லாத விலங்குகள் இருக்கின்றன.
நேதாஜி சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் ஜைனமத மக்களும், இந்துக்களும் தென்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications