பயணியரைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் நோர்புலிங்கா நிலையம், மெக்லியோட்கஞ்ச்சிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தலாய் லாமாவால் உருவாக்கப்பட்ட இந்த நிலையம், சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் திபெத்திய கலை, கலாச்சாரம், இசை, நடனம், மர வேலை, கைவினை பொருட்கள், மற்றும் சிற்பங்கள் போன்ற துறைகளில் கல்வி வளத்தை புகுத்துவதற்காக அற்பணிக்கப்பட்டுள்ளது.
லோசெல் டால் அருங்காட்சியகம், கடந்த 15 ஆண்டுகளில் 160 பொம்மைகள் செய்து காட்டியது, இந்நிறுவனத்தின் மற்றொரு ஈர்ப்பாக உள்ளது. பொம்மைகள் திபெத் மக்களின் நடவடிக்கைகள் மற்றும் ஆடைகள் பற்றி வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்நிலையத்திற்கு விஜயம் செய்யும் போது, அருகில் அமைந்துள்ள கியாடோ மடாலத்தையும் பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications