தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் இந்த சென்றாய பெருமாள் கோயில் மிக முக்கியமான ஒன்றாகும். தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் முதலில் முட்டை வடிவில் அமைந்த ஒரு அரச கோட்டையாகும்.
முற்கால தமிழ் மன்னரான அதியமானின் தலைநகராக இந்த கோட்டை இருந்திருக்கிறது என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர். கிருஷ்ண தேவராயர் மற்றும் ராய்சல அரசர்கள் இந்த கோட்டையில் சென்றாய பெருமாள் கோயிலை கட்டினர்.
இந்த கோயிலுக்கு முன் மிக நீண்ட பெரிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் வழியாக சென்று கோயிலின் உட்பிரகாரத்தை அடையலாம்.
இந்த ஆலயத்தின் உட்பகுதிகளில் 13ஆம் நூற்றாண்டின் அழகு வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. வசந்த காலத்தில் இந்த ஆலயத்திற்கு வந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்று இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.



Click it and Unblock the Notifications