திமாபூர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Dimapur,Nagaland 25 ℃ Clear
காற்று: 2 from the ENE ஈரப்பதம்: 83% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Tuesday 17 Oct 23 ℃ 73 ℉ 33 ℃92 ℉
Wednesday 18 Oct 22 ℃ 72 ℉ 32 ℃90 ℉
Thursday 19 Oct 23 ℃ 73 ℉ 32 ℃89 ℉
Friday 20 Oct 21 ℃ 70 ℉ 27 ℃80 ℉
Saturday 21 Oct 19 ℃ 66 ℉ 26 ℃78 ℉

வறண்ட வானிலை நிலவும் பருவத்தில் அதாவது  அக்டோபர் முதல் மே வரை பயணப்படுவதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனினிம் இப்பகுதியின் மழையை அனுபவிக்க நினைத்தால் மழைக்காலத்தில் பயணிக்கலாம். ஆனால் அதற்கேற்ற மழைக்கால உடைகளை எடுத்துச் செல்லல் அவசியம். 

கோடைகாலம்

மே மாதத்தில் துவங்கு கோடைக்காலத்தில் வெயில் 40டிகிரி வரை கடுமையாக இருக்கிறது. ஈரப்பதமும் மிக அதிகபட்சமாக 93%வரை நிலவுவதால் இப்பருவத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நலம்.

மழைக்காலம்

ஈர வானிலை இந்தப்பருவத்தில் தான் நிலவுகிறது. ஜூன் மாதம் துவங்கி மழைக்காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கிறது. ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மிகக் கடுமையான மழை பொழிகிறது. சராசரி மழையின் அளவு 1500மிமீ.

குளிர்காலம்

திமாபூரின் குளிர்காலம் கடுமையாக இருப்பதில்லை. ஜனவரி மாதத்தில் குறைந்தபட்சமாக 9-10டிகிரி வரை குளிர் செல்கிறது. நவம்பரில் இருந்து ஃபிப்ரவரி இறுதிவரை குளிர்காலம் நீள்கிறது. சில நேரங்களில் 4டிகிரி வரையில் தட்பவெப்பநிலை இறங்குகிறது.