முகப்பு » சேரும் இடங்கள் » திமாபூர் » ஈர்க்கும் இடங்கள்
 • 01நாகாலாந்து விஞ்ஞான மையம்

  விஞ்ஞானத்தை செயற்கல்வி மூலம் கற்பிக்கும் நோக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் இப்பூங்கா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது. பல வகையான பகுதிகள் கொண்ட இப்பூங்காவில் ஒவ்வொரு மையநோக்கிற்கும் ஏற்றவாறு உபகரணங்கள் உள்ளன.

  உதாரணத்திற்கு 'நமது உணர்ச்சி மையங்கள்', 'குழந்தைகளின் இடம்', 'வேடிக்கை விஞ்ஞானம்' ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இரவு வானத்தை பிரதிபலிக்கும் வண்ணம் கோலரங்கமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.   

  தட்டையாக்கவல்ல தாரமண்டல் எனும் கூம்பு வடிவ பகுதியும் இங்கு பிரபலமாக விளங்குகிறது. பல வகையான விஞ்ஞான விளையாட்டு உபகரணங்கள் கொண்டதாக திறந்தவெளி விஞ்ஞான பூங்கா அமைந்திருக்கிறது. இந்த உபகரணங்களைக் கொண்டு விஞ்ஞான தத்துவங்களை எளிமையாக கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடிகிறது.

  திங்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 10 முதல் மாலை நான்கு வரை இப்பூங்கா திறந்திருக்கிறது. இங்கு பயணிகள் தங்கள் முழு நாளையும் செலவிட்டு மகிழலாம்.

  + மேலும் படிக்க
 • 02நிச்சுகார்ட்

  நிச்சுகார்ட்

  திமாபூரில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது நிச்சுகார்ட் கிராமம். இன்று சும்முகெடிமா என்று வழங்கப்படும் இவ்விடம் இங்கு நிலவும் பல்லுயிர் கலாச்சாரத்திற்காக புகழ்பெற்று விளங்கிறது.

  நாகாலாந்தின் உண்மையான சூழலை அறிய விரும்புவோர் இவ்விடத்திற்கு அவசியம் செல்ல வேண்டும். திபு-குகி மலைகளில் அடிவாரத்தில் இருக்கும் இக்கிராமம் 1866ல் துணை ஆணையரின் தலைமிடமாக உருவாக்கப்பட்டது. நாகாலாந்தின் முதல் பள்ளியும், மருத்துவமனையும் அமையப்பெற்ற இடம் என்ற தனிப்பெருமையும் இவ்விடத்திற்கு உண்டு.

  பல அரிய வகையான செடிகளுடனும், மிருகங்களுடனும் இருக்கும் இவ்விடத்தில் 19ஆம் நூற்றாண்டு நாகாலாந்தின் அழகைக் காணலாம். முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கும் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியும் இங்கு அமைந்துள்ளது. அங்கமி மற்றும் கொனொமா பழங்குடி இன மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.  

  + மேலும் படிக்க
 • 03சிவன் கோவில்

  சிவன் கோவில்

  1961ல் சிங்ரிஜான் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ரங்கபஹர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் கத்தியை ஒரு கல்லில் தீட்டும்போது கல்லில் இருந்து ஒரு திரவம் வழிய, அதே இரவில் அவர் கனவில் சந்நியாசி உருவில் அடிக்க சிவபெருமான் வரவும் அதை ஊர்மக்களிடம் தெரிவித்தார் அவர்/  

  பூசாரி மற்றும் கற்றோர் துணையுடன் அவ்விடத்திற்கு சென்ற ஊர்மக்கள் அந்த கல் ஒரு சிவலிங்கம் என்பதை அறிந்துகொண்டனர். முதலில் சாய்வாகக் கிடந்த அந்தக் கல்லை பல வழிபாடுகளுக்குப் பிறகு நிமிர்த்தினர். அன்றிலிருந்து இவ்விடம் சிங்ரிஜானின் புகழ்பெற்ற வழிபாட்டுத்தளமாக விளங்குகிறது.

  + மேலும் படிக்க
 • 04மெட்ஜிஃபெமா

  மெட்ஜிஃபெமா

  திமாபூரின் முக்கியமான சுற்றுலாதளமாக அதன் உப பகுதியான மெட்ஜிஃபெமா விளங்குகிறது. 'செடியில் இருந்து வரும் நீர்' என்ற அர்த்தத்தில் கஸ்பாணி என்றழைக்கப்பட்ட இவ்விடம் கடல் மட்டத்தில் இருந்து 360கிமீ உயரத்தில் பள்ளத்தாக்கிலும் அல்லாமல் குன்றிலும் அல்லாமல் நடுவில் அமைந்திருக்கிறது.  

  திமாபூர் மற்றும் கோஹிமா ஆகிய நகரங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் மெட்ஜிஃபெமா அதன் அமைப்பிற்காக புகழ்பெறு விளங்குகிறது. திமாபூரில் இருந்து 33கிமீ தொலைவிலும் கோஹிமாவில் இருந்து 44கிமீ தொலைவிலும் இவ்விடம் அமைந்துள்ளது.

  இங்கிருக்கும் விவசாய மற்றும் கிராம வளர்ச்சிக் கல்லூரி, நாகாலாந்து பல்கலைக்கழகம் ஆகியவை இந்நகரத்தில் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

  அண்ணாச்சிப் பழத்திற்கு புகழ்பெற்ற மெட்ஜிஃபெமா நகரத்தைச் சுற்றி ஓய்யிம்கும், ஓயிம்டி, டரோகர்ஜன் ஆகிய கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இக்கிராமங்கள் அண்ணாச்சிப் பழ கிராமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

  + மேலும் படிக்க
 • 05குகி டொலோங் கிராமம்

  குகி டொலோங் கிராமம்

  வடகிழக்கு மாகாணங்களின் மிகப்பழமையான குகி பழங்குடி மக்கள் வாழும் இக்கிராமம் மெட்ஜிஃபெமா தாலுகாவில் திமாபூர் மாவட்டத்தில் இருந்து இருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

  குகி மக்களின் கலாச்சாரம், உணவுப்பழக்கம் ஆகியவற்றை இங்கு அறிந்துகொள்ளலாம். நாகாலாந்து பழங்குடியினர் என குகி பழங்குடியினரை பல தவறாக எண்ணியிருந்தாலும் குகி பழங்குடியினர் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கென தனியான கலாச்சாரமும், பாரம்பரியமும் இருக்கிறது.   

  மூங்கிலால் செய்யப்பட்ட குகி மக்களின் பாரம்பரிய வீடுகளை இங்கு காணலாம். நாகாலாந்தின் பிற பகுதிகளில் இருக்கும் வீடுகளில் இருந்து இவ்வீடுகள் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.

  குகி மக்களின் எளிமையான வாழ்க்கைமுறையும், சகோதரத்துவமும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாய் இருக்கிறது. வண்ணங்களுக்காகவும், வடிவங்களுக்காகவும் புகழ்பெற்ற குகி சால்வைகளை வாங்க மறக்காதீர்கள்.

  + மேலும் படிக்க
 • 06உயிரியல் பூங்கா

  ஒரு இடத்தின் உயிரியல் அம்சங்களைக் காணாவிடில் அப்பயணம் முழுமை பெறாது. வடகிழக்கு மாகாணங்களின் தாவர மற்றும் வனயியல் தொன்மைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் இப்பூங்கா விளங்குகிறது. இவ்விடம் புத்துணர்ச்சியளிக்கும் பூங்காவாகவும் விளங்குகிறது.

  நகரத்தில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ள இப்பூங்கா 176 ஹெக்டேர் அல்லது 434.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள பூங்கா நீர்சார் பறவைகளுக்கு ஏற்றவாறு பள்ளங்களையும் ஆங்காங்கே கொண்டுள்ளது.

  2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி மாநிலத்தின் இயற்கை வளத்தை பறைசாற்றுவதற்காக மாநில அரசு இப்பூங்காவைத் திறந்தது. இப்பூங்கா மாநிலத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த வடகிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு மையமாகவும் செயல்படுகிற

  + மேலும் படிக்க
 • 07செய்தெகிமா கிராமம்

  செய்தெகிமா கிராமம்

  திமாபூருக்கு வெளியே அமைந்துள்ள செய்தெகிமா கிராமம் நகரின் மையப்பகுதியில் இருந்து ஒருமணி நேர தொலைவில் அமைந்துள்ளது. 280அடி உயரத்தில் இருந்து விழும் இந்நீர்வீழ்ச்சி பெயருக்கு ஏற்றார்ப்போல மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. சாகசப் பயணங்களில் விருப்பமுள்ளவர்கள் குளிர்காலங்களில் நீர் குறைவாக இருக்கும் சமயத்தில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.

  நாகாலாந்து சுற்றுலாத்துறை பயணிகளுக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்திருக்கிறது. குன்றின் உச்சி நோக்கி ஒஅயணித்தால் திமாபூர் நகரத்தை அடையலாம்.

  விரைவில் இங்கு ஓய்விடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. ஆனால் சரியில்லாத சாலைகளால் இவ்விடத்தை அடைய சிறிது கடினமாக இருந்தாலும் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது.     

  + மேலும் படிக்க
 • 08க்ரீன் பார்க்

  திமாபூரில் அமைந்திருக்கும் க்ரீன் பார்க் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட அருமையான சுற்றுலாதளமாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பொழுதுபோக்க தகுந்த இடமாக கருதப்படுகிறது.  'க்ரீன் பார்க்' என்ற பெயருக்கேற்றபடி பச்சைப் பசேல் என்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது.

  மாநில அரசால் பராமரிக்கப்படும் தோட்டக்கலை பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கிறது க்ரீன் பார்க். பயணிகள் இங்கிருக்கும் ஏரியில் படகு சவாரி செய்யலாம். அதுமட்டுமல்லாது நிழல் படர்ந்த திறந்தவெளியிலோ, உணவகத்திலோ உணவு உண்ணலாம்.  

  வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் இப்பூங்கா செயல்படுகிறது. பூங்காவிற்குள் நுழைய சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு பூங்காவின் விடுமுறை நாட்களில் தனியார் நிகழ்ச்சிக்காக பூங்கா வாடகைக்கு விடப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 09திமாபூர் பேப்டிஸ்ட் தேவாலயம்

  திமாபூர் பேப்டிஸ்ட் தேவாலயம்

  திமாபூர் மையப்பகுதியில் அமைந்திருக்கும் திமாபூர் ஏஓ பேப்டிஸ்ட் தேவாலயம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும். 5000 ஏ.ஓ கிறித்தவ குடும்பங்களுக்கு தேவாலயமாக விளங்கும் இவ்விடத்தில் 15000 பேர்களுக்கும் மேல் ஞானஸ்தானம் பெற்றிருப்பதால் இந்தியாவின் மிகப்பெரிய ஞானஸ்தான தேவாலயமாக விளங்குகிறது.

  ஒரே நேரத்தில் 10000பேர் வரை அமரக்கூடிய வகையில் இந்த தேவாலயம் அமைந்திருக்கிறது. ஞாயிறு இறைச்சேவையின் போது கலாச்சார உடையில் மக்கள் பங்குகொள்வது கண்டிப்பாக பார்க்க வேண்டிய காட்சியாகும்.

  அரை நூற்றாண்டு பழமையான இந்த தேவாலயத்தில் கட்டிடக்கலைக்காக புகழ்பெற்று விளங்குவதோடு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை உலகுக்கு உணர்த்துவதாகவும் இருக்கிறது.

  1958ல் ஏழைகளுக்கு உதவி புரியவும், கடவுளின் செய்தியை மக்களுக்குப் பரப்பவும் ஆரம்பிக்கப்பட்டதே இந்த தேவாலயம். ஒவ்வொரு கிறித்துமஸ் விழாவின் போது விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்த தேவாலயம் இன்னும் அழகுடன் விளங்குகிறது.  

  + மேலும் படிக்க
 • 10சும்முகெடிமா கிராமம்

  சும்முகெடிமா கிராமம்

  திமாபூர் அருகில் இருக்கும் பழங்கலாம கிராமமான சும்முகெடிமா குன்றுகளில் அமைந்திருக்கும் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன.

  திமாபூரில் இருந்து 14கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சும்முகெடிமா கிராமம் நாகா குன்றுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நாகா ஹில்ஸ் மாவட்டத்தின் தலைமையிடமான இக்கிராமம் விளங்கியது.

  நாகாலாந்து சுற்றுலாத் துறை இப்பகுதியில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் பொருட்டு திமாபூர் மற்றும் கர்பி-அங்லாங்க் மாவட்டத்தின் சில பகுதிகள் முழுதும் தெரியும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 8 கிமீ தொலைவில் குன்றின் உச்சியில் ஒரு சுற்றுலா கிராமத்தை அமைத்துள்ளது.

  மேலும் கடந்த 20வருடங்களில் ஐந்து மடங்கு வேகமாக வளர்ந்திருக்கும் இப்பகுதியின் அசுர வளர்ச்சியை கவனத்தில் கொண்டு திமாபூர்-சும்முகெடிமா பகுதியை தனி நகரமாக அறிவிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

  + மேலும் படிக்க
 • 11கச்சாரி இடிபாடுகள்

  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திமாபூர் பண்டையகால கச்சாரி வம்சத்தின் தலைநகர் என்று நிரூபித்திருக்கிறார்கள். பெருந்தூண் காலத்தில் முக்கியமான இடமாக திமாபூர் கருதப்படுகிறது.

  அவ்வரசின் இடிபாடுகள் காணப்படும் இடம் கச்சாரி இடிபாடுகள் என வழங்கப்படுகிறது. மேலும் 13ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அஹோம் படையெடுப்பு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் இந்த இடுபாடுகளில் கிடைக்கின்றன.  

  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் வண்ணம் அமைந்திருக்கும் இவ்விடம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு பொக்கிஷமாக திகழ்கிறது.

  இந்து மதப்பின்னணியில் இருந்தாலும் கச்சாரி மக்கள் ஆர்யர்கள் அல்லாதவர்கள் என்பதற்கு இவ்விடம் ஏராளமான சான்றுகளை கொண்டுள்ளது.

  இவ்விடத்தில் அமைந்திருக்கும் பெருந்தூணு புகழ்பெற்று விளங்குகிறது.. அதுமட்டுமல்லாது கோவில்கள், தொட்டிகள் ஆகியவற்றின் இடிபாடுகளும் இங்கு இருக்கின்றன. பல வடிவங்களில் சிதறிக்கிடக்கும் கற்களும் இங்கு காணப்படுகின்றன. தற்சமயம் இப்பகுதி சிறப்பாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.  

  + மேலும் படிக்க
 • 12ருஜாஃபெமா

  ருஜாஃபெமா

  கடைவீதிக்கு சென்று பொருட்கள் வாங்காத எந்த சுற்றுலாவும் முழுமையான நிறைவுபெற்றதாகாது. பொருட்கள் வாங்க சிறந்த இடமாகவும் திமாபூர் விளங்குகிறது. குறிப்பாக நாகாலாந்தின் பாரம்பரிய கலைப் பொருட்கள் வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.

  கோஹிமாவில் இருந்து 5கிமீ தொலைவில் திமாபூர்-கோஹிமா சாலையில் அமைந்துள்ள ருஜாஃபெமா ஏராளமான சாலையோரக் கடைகளைக் கொன்டிருக்கிறது.  

  வண்ணமயமான தெருக்கள் நாகா கலாச்சாரத்தால் சூழப்பட்டுள்ளது. பாரம்பரிய நாகாலாந்து ஆடைகள், சால்வைகள் மற்ற்உம் பிற பொருட்களால் கடைகள் நிரம்பி வழிகின்றன. இங்கு கிடைக்கும் பெரும்பாலானா பொருட்கள் வளர்ச்சி பெரும் குடிசை மற்றும் கைவினைத் தொழில்களின் மூலம் பெண்களால் செய்யப்படுபவை ஆகும்.

  அது மட்டுமல்லாது கச்சாரி வம்சத்தின் மிச்சங்களும் இங்கு காணப்படுகின்றன., வெறும் இடிபாடுகளாக தோற்றமளித்தாலும் வரலாற்றுச் சான்றுகளாக இவ்விடங்கள் விளங்குகின்றன. திமாபூருக்கு அருகிலேயே இவ்விடம் அமைந்திருப்பதால் சிறிது நேர பயணத்திலேயே இவ்விடத்தை அடையலாம்.

  + மேலும் படிக்க
 • 13டியெஜெஃப் கைவினை கிராமம்

  டியெஜெஃப் கைவினை கிராமம் என்ற பெயருக்கு ஏற்றார்ப்போல இக்கிராமம் கைவினை மற்றும் கைத்தறிக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இப்பகுதியைச் சேர்ந்த டெனியிமெய் பழங்குடி மக்கள் கைவினைக் கலையில் திறமைசாலிகளாக விளங்குகிறார்கள்.

  அரிதான கைவினைக் கலைகள், மரவேலைப்பாடுகள், மூங்கில் வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் இங்கு காணலாம்.

  திமாபூரில் இருந்து 13கிமீ தொலைவில் அமைந்துள்ள டியெஜெஃப் கிராமத்திற்கு வாடகை வண்டிகளும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இங்கு கைவினைக் கண்காட்சி மட்டுமல்லாது அவை செய்யப்படும் முறைகளும் பயணிகளுக்கு விளக்கப்படுகிறது.

  நாகாலாந்து கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் வளர்ச்சிக் கழகத்தால் இக்கிராமம் நிர்வகிக்கப்படுகிறது. கலைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் வண்ணம் இக்கிராமம் செயல்படுகிறது.

  மேலும் உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் பயன்பெறும் வண்ணம் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.

  + மேலும் படிக்க
 • 14திபுபார்

  திபுபார்

  நாகாலாந்தின் உண்மையான அழகை ஒரே இடத்தில் தரிசிக்க விரும்பினால் திமாபூருக்கு வெளியே அமைந்திருக்கும் திபுபார் கிராமத்திற்கு கண்டிப்பாக செல்லவேண்டும். நகரின் மையப்பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கிராமத்தில் 16 பழங்குடி இனங்களைச் சேர்ந்த 14000பேர் வசிக்கிறார்கள்.

  நாகாலாந்தின் அமைதியையும், மகிழ்ச்சியான சூழ்நிலையையும் உணர்த்தும் வண்ணம் அங்கமி, லோதா, சகெஹ்சங், சுமி, சங்டம், ஏஓ, ரெங்மா பொச்சுரி மற்றும் ஜிலியாங்க் இனக்குழுக்களைச் சேர்ந்த பலர் இங்கு இணைந்து வசிக்கிறார்கள்.

  இந்த கிராமத்திற்குப் பயணப்படும் போது பலவகையான நாகாலாந்து பழங்குடிகளுக்குள் உணவு, உடை, மொழி, பழக்கவழக்கங்களில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ளலாம்.

  நாகாலாந்து சார்ந்த நினைவுச்சின்னங்களை வாங்கிக் கொள்ள மறக்காதீர்கள். நாகாலாந்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல நேரமில்லாவிடினும் திபுபார் செல்வது அவசியம்.  

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Feb,Tue
Check Out
21 Feb,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed