சிறிய காஷ்மீர் என்று பொருள் படும் சோட்டா காஷ்மீர் என்ற பிரபலமான பகுதிதான் படேர்வா ஆகும். இந்த இடம் கில்லா மொஹல்லாவிலிருந்து குப்த கங்கா வரையிலும் மற்றும் காபிரிஸ்டானிலிருந்து காத்னா வரையிலும் நீண்டு விரிந்துள்ள அழகிய சுற்றுலா தலமாகும்.
இந்த இடத்தில் தான் புகழ் பெற்ற கோவில்களான வாசுகி நாக் கோவில், சுபார் நாக் கோவில், ஷீட்லா மாதா கோவில் மற்றும் குப்த கங்கா கோவில் ஆகியவை உள்ளன. துபு நாக் கோவில், நாக்னி மாதா கோவில் அற்றும் ஆலாபனி கோவில் ஆகியவை இங்குள்ள பிற மத வழிபாட்டுத் தலங்களாகும். இந்த கோவில்களின் பல்வேறு திருவிழாக்கள் ஏப்ரல் மாதங்களில் களைகட்டத் துவங்கி விடும்.
இந்துக்களின் முக்கியமான புனித யாத்திரையான கைலாய யாத்திரைக்காக இவ்விடம் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. இயற்கையின் மடியில் தவழும் படேர்வா, சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கவரும் இயற்கை வடிவமைப்புகளை காட்டவல்லது.
சுற்றுலாப் பயணிகள் பாட்ரி, சியோஜ், ஜான்ட்ரான் மற்றும் ரோசாரியா ஆகிய பசும்புல்வெளிகளில் சுற்றுச்சுழல் சாகசங்களையும் (Eco Adventure) செய்ய முடியும். இந்த பகுதியின் ஜெய், கேலார், ப்ளெய்சா, சிந்தா மற்றும் சிராலா ஆகிய பள்ளத்தாக்குகள் மலையேற்றம் மற்றும் ஓய்விடங்கள் அமைக்க மிகவும் ஏற்ற இடங்களாகும்.



Click it and Unblock the Notifications