த்ராஸ் செல்லும் பயணிகள் நகரத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கும் சுரு பள்ளத்தாக்கிற்கு மலையேற்றம் செய்யலாம். 4500மீ உயரத்தில் இருக்கும் உம்பாலா வழியின் இருபுறம் இருக்கும் கிராமங்களின் அழகையும், புல்வெளிகளையும் சுரு பள்ளத்தாக்கிற்கு பயணப்படும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இங்கிருந்து அமர்நாத் குகைக்கு இட்டுச் செல்லும் மலையேற்ற வழியும் உண்டு. ஜோஜிலாவிற்கு அடியில் இருக்கும் மினாமார்கில் தொடங்கும் பயணம் 5200கிமீ நீளமுள்ள உயரமான பாதையில் 3நாட்கள் வரை நீள்கிறது. மேலும் த்ராஸ் நகரத்தில் பல சிறிய மலையேற்ற பாதைகளும், நடைபாதைகளும் உண்டு.



Click it and Unblock the Notifications