Search
  • Follow NativePlanet
Share

துர்ஷேத் – இயற்கையின் மடியில் கொஞ்சம் இளைப்பாறுங்கள்!

10

அம்பா நதிக்கரையில் பாலி மற்றும் மஹாத் எனப்படும் இரண்டு அஷ்டவிநாயக் கோயில்களுக்கிடையே இந்த துர்ஷேத் எனும் அமைதியான கிராமம் அமைந்துள்ளது. இது 42 ஏக்கர் அளவில் பரந்து காணப்படும் ஒரு வனப்பகுதியின் அங்கமாக உள்ளது.

சஹயாத்ரி மலைகளின் மடியில் உருவாகியிருக்கும் இந்த கிராமம் நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி கோபோலி எனும் ஊருக்கு அருகில் உள்ளது. இந்த சுற்றுலாத்தலம் மா, மற்றும் மாஹு மரங்கள் அடர்ந்த ஒரு பசுமையான தோப்புப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. நகரவாசிகள் சற்றே இயற்கையின் மடியில் இளைப்பாறுவதற்கேற்ற சிற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது.

மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களுக்கு வெகு அருகே அமைந்திருப்பதால் அந்நகர மக்கள் இந்த சிற்றுலாத்தலத்தை வெகுவாக விரும்புகின்றனர்.

துர்ஷேத் – ஒரு பசுமைக்கிராமம்

துர்ஷேத் கிராமம் சஹயாத்ரி மலைகளின் அற்புதமான அழகை தரிசிக்க உகந்த ஸ்தலமாக இருப்பதோடு, இங்குள்ள வனப்பகுதிகளின் இயற்கை நடைப்பயணம் மேற்கொள்ளும்போது பலவகையான பறவைகளையும் பார்த்து மகிழும் வகையில் உள்ளது.

பசுமைக்காட்சிகள் சூழ்ந்த இந்த நடைபாதைகளில் செல்லும்போது பலவிதமான அரிய பறவைகளின் ஒலிகள் நம் மனதில் மகிழ்ச்சியாக நிரம்புகின்றன. மேலும் மாசற்ற தூய்மையான காற்றும் குளுமையும் நம்மை தழுவி ஒரு விதமான சாந்த நிலையையும் இங்குள்ள சூழல் தருகிறது.

துர்ஷேத் கிராமம் குளுமையான காற்றை அனுபவிக்கவும் வானத்தில் நட்சத்திரங்களின் ஜொலிப்பை பார்த்து ரசிக்க மிகவும் ஏற்ற இடமாகும். மழைக்காலத்தில் இங்கு விஜயம் செய்தால் நாம் ஈர மண்ணின் வாசனையையும் இயற்கையில் எழிலையும் மிக அற்புதமாக அனுபவிக்கலாம்.

துர்ஷேத் ஸ்தலத்தின் விசேஷ அம்சங்கள்

தன் பிரத்யேக இயற்கை அமைப்பு காரணமாக துர்ஷேத் கிராமம் மலையேற்றம் மற்றும் காட்டுச்சுற்றுலா போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது. மேலும், இங்குள்ள பலி கணபதி கோயில் மற்றும் மஹாத் கணபதி கோயில் இரண்டும் ஆன்மீக யாத்ரீகர்கள் விரும்பி தரிசிக்கும் கோயில்களாக அமைந்துள்ளன.

இந்த துர்ஷேத் கிராமம் பற்றிய ஒரு அதிகம் அறியப்படாத தகவல் இது சிவாஜி மஹாராஜ் கர்தலாப் கானை எதிர்த்து போரிட்ட உம்பர்கண்ட போரின் போர்க்களமாக இருந்துள்ளது என்பதாகும். துர்ஷேத் கிராமம் விமானம். ரயில் மற்றும் சாலை மார்க்கமாக்க எளிதில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

துர்ஷேத் சிறப்பு

துர்ஷேத் வானிலை

சிறந்த காலநிலை துர்ஷேத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது துர்ஷேத்

  • சாலை வழியாக
    மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து துர்ஷேத் பகுதிக்கு இயக்கப்படுகின்றன. மும்பையிலிருந்து 250 ரூபாய் கட்டணத்தில் பேருந்து மூலமாக துர்ஷேத் கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    துர்ஷேத் கொங்கண் ரயில்வே பாதையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் மும்பை வி.டி ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. இங்கிருந்து 2000 ரூபாய் வாடகையில் துர்ஷேத் வருவதற்கு நிறைய டாக்சிகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    துர்ஷேத் கிராமத்திலிருந்து 105 கி.மீ தூரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 2000 ரூபாய் வாடகையில் துர்ஷேத் வருவதற்கு நிறைய டாக்சிகள் கிடைக்கின்றன. இது தவிர புனே லோஹேகாவ்ன் விமான நிலையம் மற்றும் நாசிக் விமான நிலையமும் துர்ஷேத் கிராமத்துக்கு அருகில் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun