துர்ஷேத் கிராமப்பகுதி ஏராளமான தாவரவகைகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. உயந்தோங்கி நிற்கும் சஹயாத்ரி மலைகளை பின்னணியில் கொண்டு இந்த பிரதேசம் அமைந்துள்ளது. எனவே இது இயற்கை மற்றும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஏற்ற ஓரு ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த துர்ஷேத் காடுகளின்வழியே மேற்கொள்ளப்படும் காட்டுச்சுற்றுலாவில் பயணிகள் இயற்கை எழிலையும் பசுமையையும் மிக அருகில் கண்டு ரசிக்கலாம். மேலும், இயற்கையான வனப்பகுதியில் சுதந்திரமாக திரியும் காட்டு விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.இயற்கையின் அழகை ரசிப்பதற்கு இந்த காட்டுச்சுற்றுலாவை காட்டிலும் சிறந்த வழி வேறொன்றுமில்லை.



Click it and Unblock the Notifications