பல்லாலேஷ்வர் எனும் ஒரு பிராமண பக்தரின் பெயரில் இந்த பல்லாலேஷ்வர் கோயில் 1760 ம் ஆண்டு 250 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. ஒரு பக்தரின் பெயரின் எழுப்பப்பட்டுள்ள ஒரே அஷ்டவினாயக் கோயில் இதுவாகும்.
இது இரண்டு ஏரிகளைக்கொண்டுள்ளது. முழுக்கோயிலும் இரண்டு கருவறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிக்கருவறையில் விநாயகரின் வாகனமான மூஷிதம் கையில் கொழுக்கட்டையுடன் விநாயகர் இருக்கும் திசை நோக்கி தொழுவதைப்போன்று காட்சியளிக்கின்றது. கோயில் முழுக்க அலங்காரமான தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள விக்கிரகம் பிராமண ரூபத்தில் உடையலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கல் பீடத்தில் அமைக்கப்பட்டு கண்கள் மற்றும் தொப்புளில் வைரக்கற்களுடன் காட்சியளிக்கின்றது.



Click it and Unblock the Notifications