ஒரு காலத்தில் உலகிலேயே மிக ஈரமான, அதிக மழைப்பொழிவு பெறும் இடமாக பிரசித்தி பெற்றிருந்த இந்த மாவ்சின்ராம் கிராமம் மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
இயற்கை ரசிகர்களின் கண்களுக்கு இந்த மாவ்சின்ராம் கிராமம் ஒரு பூலோகச்சொர்க்கம் போன்றே காட்சியளிக்கிறது. செங்குத்தாக உயந்தும் மடிந்தும் கிடக்கும் பசுமலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை இந்த பூமிக்கு வரும் பயணிகளை மயங்க வைக்கின்றன.
இவை தவிர ‘மாவ்ஜிம்-புயின் குகை’ எனப்படும் ஒரு குகை அமைப்பு ஒன்றும் இங்குள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றிருக்கிறது. ஸ்டாலக்மைட் படிவங்களால் ஆன இந்த குகையின் உள்ளே கனிமத்திரவங்கள் கூரையிலிருந்து சொட்டிய நிலையில் இறுகி காட்சியளிக்கின்றன. வட்டக்கூரை போன்ற அமைப்பினை கொண்ட ‘சிம்பர் ராக்’ எனும் பாறை அமைப்பையும் இந்த குகையில் பார்க்கலாம்.
இவை தவிர மாசின்ராம் கிராமத்திற்கு அருகே பார்க்க வேண்டிய இதர சுற்றுலா அம்சங்களும் நிறைய உள்ளன. க்ரேங் கிரேங் வியூபாயிண்ட், ஜக்ரேம் வெந்நீர் ஊற்று மற்றும் ரிட்மாவ்க்சிர் வியூபாயிண்ட் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
ஒரே நாளில் மேகாலயா சுற்றுலாப்பேருந்துகள் அல்லது தனியார் வாடகை வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications